Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கால்பந்து: கோல்மழை பொழிந்த இங்கிலாந்து: பரிதாபத்தில் பனாமா

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (08:59 IST)
உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து அணி 6 கோல்கள் அடித்தடுத்து போட்டு கோல் மழை பொழிந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி பனாமா அணியை 6-1 என்ற கோல்கணக்கில் தோற்கடித்தது
 
இங்கிலாந்து அணி ஏற்கனவே பலம் வாய்ந்த அணியாக இருந்து வரும் நிலையில் நேற்றைய பனாமா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்கம் முதலே கோல் மழை பொழிந்தது. ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் ஸ்டோன்ஸ் முதல் கோலும், 22-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு மூலம் கேப்டன் ஹாரி கேன் ஒரு கோலும், அதன் பின்னர். 36-வது நிமிடத்தில் லிங்கார்டு கோலும், 40-வது நிமிடத்தில் ஸ்டோன்ஸ் ஒரு கோலும் பின்னர் அடுத்த நிமிடமே பெனால்டி கார்னர் வாய்ப்பின் மூலம் ஹாரி கேன் கோலும் அடித்ததால் இங்கிலாந்து அணி முதல் பாதியின் முடிவில் 5-0 என்ற கோல்கணக்கில் முன்னிலைப் பெற்றது.
 
முதல் பாதி போலவே ஆட்டத்தின் இரண்டாவது பாதி நேரத்திலும் இங்கிலாந்து கையே ஓங்கி இருந்தது. போட்டியின் 62-வது நிமிடத்தில் ஹாரி கேன் மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணி 6-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணியினர் அடுத்தடுத்து கோல் போட்டு வருவதை அதிர்ச்சியுடன் நோக்கிய பனாமா அணியினர் கடைசியாக  78-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தனர். இதனையடுத்து 6-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

லீக் போட்டிகளில் விளையாட தேசிய அணியைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்… லாரா வேதனை!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா?... துணைப் பயிற்சியாளர் அளித்த பதில்!

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு.. ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments