யுடியூப் சேனல் ஆரம்பித்த 90 நிமிடங்களில் ஒரு மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ்… ரொனால்டோ படைத்த சாதனை!

vinoth
வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (09:25 IST)
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர்.  கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரொனால்டோ, அதற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்துவீரர்களில் ஒருவரான ரொனால்டோ, தற்போது இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைக் கொண்ட பிரபலமாகியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்கள் கொண்ட விளையாட்டு வீரர் என்ற சாதனையை அவரிடம்தான் உள்ளது.

தன்னுடைய கால்பந்து வாழ்க்கையின் கடைசிகாலத்தில் இருக்கிறார் ரொனால்டோ. இந்நிலையில் இப்போது அவர் யுடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார். அதன் மூலம் அவர் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கவுள்ளார்.

UR christiano என்ற பெயரில் சேனல் தொடங்கிய அவர் அடுத்தடுத்து சில வீடியோக்களை பதிவேற்றினார். இந்நிலையில் அவர் சேனல் ஆரம்பித்த 90 நிமிடங்களில் அவரை ஒரு மில்லியன் பேர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். அதன் மூலம் சேனல் ஆரம்பித்த ஒன்றரை மணிநேரத்தில் யுடியூபின் கோல்டன் பட்டனை அவர் பெற்றுள்ளார். அதன் பின்னர் 12 மணிநேரத்தில் அவர் சேனலின் சப்ஸ்க்ரைபர் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி: கோலி, கெய்க்வாட் அசத்தல்!

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments