தொடங்கியது செஸ் ஒலிம்பியாட்! தங்கம் வெல்வாரா பிரக்ஞானந்தா? - எதிர்பார்ப்பில் மக்கள்!

Prasanth Karthick
புதன், 11 செப்டம்பர் 2024 (09:57 IST)

ஹங்கேரியில் 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கும் நிலையில் தங்கம் வெல்லும் முனைப்பில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தீவிரமாக உள்ளனர்.

 

 

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. கடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடந்த போது ஓபன் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவு இரண்டிலும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் வெண்கல பதக்கத்தை வென்றனர்.

 

இந்நிலையில் 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரியில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி, ஹரிக்ரிஷ்ணா பெந்தாலா ஆகியோர் உள்ளனர்.

 

மகளிர் பிரிவு அணியில் ஹரிகா, வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், தானியா சச்தேவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 

ALSO READ: சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் பந்தயம்! தேதி அறிவிப்பு..!
 

இன்று தொடங்கி 23ம் தேதி வரை நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் 197 அணிகளும், மகளிர் பிரிவில் 184 அணிகளும் பங்கேற்கின்றன. உக்ரைன் மீதான போர் காரணமாக 2வது முறையாக ரஷ்யாவிற்கு செஸ் ஒலிம்பியாடில் விளையாட தடை தொடர்கிறது.

 

மொத்தம் 11 சுற்றுகளாக நடைபெறும் இந்த போட்டிகளில் வெற்றிபெறும் அணிக்கு தலா 2 புள்ளிகள், டிராவுக்கு 1 புள்ளி வழங்கப்படும். 11 சுற்று முடிவில் முதல் மூன்று இடங்களை பெறும் அணிகள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வெல்லும். இந்த முறை தங்க பதக்கம் வெல்வதில் இந்திய அணி முனைப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஞ்சிப் போட்டிகளில் விளையாடும் என்னால் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாதா?... ஷமி ஆதங்கம்!

உலகக் கோப்பைக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு… விராட் & கோலி குறித்த கேள்விக்கு கம்பீர் மழுப்பல் பதில்!

யூடியூப் 'வியூஸ்'க்காக இப்படி பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? ஸ்ரீகாந்துக்கு கம்பீர் கேள்வி..!

15 வயதில் துணைக் கேப்டன்… ரஞ்சிக் கோப்பை தொடரில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

2வது இன்னின்ங்சில் இந்தியா.. வெற்றிக்கு இன்னும் எத்தனை ரன்கள் தேவை?

அடுத்த கட்டுரையில்
Show comments