Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி விக்கெட்டை எடுக்க கோலி கொடுத்த ஐடியா… யாஷ் தயாள் பகிர்ந்த தகவல்!

vinoth
புதன், 11 செப்டம்பர் 2024 (07:13 IST)
கடந்த மே மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் முக்கியமான போட்டி ஒன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூர் அணியிடம் தோல்வி அடைந்த நிலையில் சி எஸ் கே அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. அந்த போட்டியில் சிஎஸ்கே தனது இறுதி ஓவரில் இருந்தபோது 6 பந்துகளில் 17 ரன்கள் அடித்தால் ப்ளே ஆப் வாய்ப்பு உறுதியாகிவிடும் என்று இருந்தது.

அப்போது யஷ் தயால் பந்து வீச முதல் பந்தில் சிக்ஸர் அடித்த தோனி இரண்டாவது பந்தில் கேட்ச் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் எட்டக்கூடிய இலக்கையும் எட்ட முடியாமல் சிஎஸ்கே தோல்வியடைந்தது. இந்த ஒரே போட்டியில் கவனிக்கப்படும் வீரராக ஆனார்.

இந்நிலையில் அந்த விக்கெட் குறித்து பேசியுள்ள யாஷ் தயாள், “அந்த ஓவரின் முதல் பந்தில் தோனி சிக்ஸ் அடித்தார். அப்போது என்னிடம் கோலி “நீ வேகமாக போட்டால் சிக்ஸ்தான் போகும், வேகத்தைக் குறை” என்றார். அப்படியே நான் செய்ய அடுத்த பந்தில் தோனி கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.  தோனியின் விக்கெட்டை நான் எடுக்கக் காரணமே கோலிதான்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐதராபாத் - ராஜஸ்தான் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் விவரங்கள்..!

தல நல்லாருக்கியா தல..? தோனியை ஓடிச்சென்று கட்டிப்பிடித்த ஹர்திக் பாண்ட்யா! Viral Video!

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

முதல் போட்டியில ஜெயிச்சதா வரலாறே இல்ல.. சேப்பாக்கம் வேற! - CSK vs MI போட்டியில் வெல்லப்போவது யார்?

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments