Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 12 January 2025
webdunia

குடிபோதையில் இருந்த மும்பை வீரர்… 15 ஆவது மாடியில் நடந்த அந்த சம்பவம்…. சஹால் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

Advertiesment
குடிபோதையில் இருந்த மும்பை வீரர்… 15 ஆவது மாடியில் நடந்த அந்த சம்பவம்…. சஹால் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!
, வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (10:01 IST)
தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் யஷ்வேந்திர சஹால் அதிர்ச்சியான செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

ஆர்சிபி அணியின் வெற்றித் தூண்களில் ஒருவராக இருந்தவர் யஷ்வேந்திர சஹால். பல இக்கட்டான போட்டிகளில் தனது சுழலால் அந்த அணிக்கு வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். ஆனால் இந்த ஆண்டு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவரை கழட்டிவிட்டது ஆர் சிபி அணி. இதையடுத்து இப்போது அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அனியில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட போது நடந்த ஒரு சம்பவம் பற்றி பகிர்ந்துள்ளார். அதில்’ நான் 2013 ல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தபோது, குடிபோதையில் இருந்த ஒரு வீரர், என்னை 15 மாடியின் பால்கனியில் இருந்து கீழே தொங்கவிட்டார். ஒரு சிறு தவறு நடந்திருந்தாலும் அன்று நான் கீழே விழுந்திருப்பேன். அன்று நான் நூலிழையில் தப்பித்தேன்’ எனக் கூறியுள்ளார். ஆனால் சம்மந்தப்பட்ட அந்த மும்பை இந்தியன்ஸ் வீரர் யார் என்பது பற்றி எதுவும் சொல்லவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் 2022: பஞ்சாப் - குஜராத் இன்று மோதல்!