Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பூம்ராவிடம் வீழ்ந்த தென் ஆப்பிரிக்க வீரர்… பவர்ப்ளேயில் முதல் விக்கெட்!

Advertiesment
இந்தியா
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கி நடந்து வருகிறது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்க இருக்கும் நிலையில் சற்று முன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் போட்டி முடிவடைந்தது என்பதும் இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட் செய்ய முடிவெடுத்தார். இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் குயிண்ட்டன் டி காக் மற்றும் யானேமான் மலான் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடிவந்த நிலையில் ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரில் பூம்ரா மலானை அவுட் ஆக்கி வெளியேற்றினார். தற்போது வரை தென் ஆப்பிரிக்க அணி 37 ரன்கள் சேர்த்துள்ளது. டி காக் மற்றும் பவுமா ஆகிய இருவரும் களத்தில் ஆடி வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த அதிரடி முடிவு!