Publish Date: Sun, 01 Mar 2020 (08:15 IST)
Updated Date: Sun, 01 Mar 2020 (08:17 IST)
நியுசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் இந்திய அணி சிறப்பாக பந்து வீசி வருகிறது.
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரைஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் பிருத்வி ஷா, புஜாரா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் அரைசதம் அடித்தனர். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை நேற்று தொடங்கிய நியுசிலாந்து ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்களை சேர்த்து வலுவான தொடக்கத்தை அமைத்தது.
அதன் பின்னர் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி நியுசிலாந்து பேட்ஸ்மேன்களை வெளியேற்றினர். சற்று முன்பு வரை நியுசிலாந்து அணி 210 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது. இந்திய அணி சார்பில் பூம்ரா 3 விக்கெட்களும், ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.