ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற வீரருக்கு அவரது மாமனார் எருமை மாடு பரிசளித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்த நிலையில் நேற்று இந்த போட்டிகள் முடிவடைந்தது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதிம், பாகிஸ்தானுக்கு திரும்பிய நிலையில் அவருக்கு அவருடைய மாமனார் முகமது நவாஸ் எருமை நாட்டை பரிசாக வழங்கியுள்ளார்.
பாகிஸ்தானில் எருமை மாடு என்பது மதிப்பு மற்றும் கௌரவம் மிக்க ஒன்றாக கருதப்படும் நிலையில் தான் தனது மருமகனுக்கு எருமை மாட்டை பரிசாக வழங்கினேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற பிறகும் நதீம் தனது கிராமம் மற்றும் அவர் கடந்து வந்த பாதையை நினைத்து பெருமை கொள்கிறார் என்றும் எருமை மாடு பரிசளித்த பின் அவரது மாமனார் பேட்டி அளித்துள்ளார்.