Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கால்பந்து: பிரேசில், போர்ச்சுக்கல் அணிகள் அபார வெற்றி

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (07:56 IST)
உலகக்கோப்பை கால்பந்து: பிரேசில், போர்ச்சுக்கல் அணிகள் அபார வெற்றி
உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடந்த இரண்டு போட்டிகளில் போர்ச்சுக்கல் மற்றும் பிரேசில் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
 
இன்று நடந்த முதல் போட்டியில் பிரேசில் மற்றும் செர்பிய அணிகள் மோதியதில் பிரேசில் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. இதனை அடுத்து ஆட்டநேர முடிவில் பிரேசில் 2 கோல்கள் போட்டதால் அந்த அணி அபாரமாக வெற்றி பெற்றது கடைசிவரை செர்பிய அணி ஒரு கோல் கூட போட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணிக்கு எதிராக கானா அணி விளையாடிய போட்டி நடைபெற்றபோது போர்ச்சுகல் அணிக்கு சவால் விடும் வகையில் கானா அணியும் அடுத்தடுத்து கோல் போட்டது. இருப்பினும் போர்ச்சுகல் அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
 
இந்த நிலையில் இன்று மாலை வேல்ஸ் மற்றும் ஈரான் அணிகளுக்கும் கத்தார் மற்றும் செனேகல் அணிகளுக்கும் இடையிலான போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

22 ரன்கள் தான்.. ஜடேஜா கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருக்கலாம்.. முன்னாள் வீரர்கள் கருத்து..!

கடைசி வரை போராடிய ஜடேஜா.. 22 ரன்களில் இந்தியா தோல்வி.. ஆட்டநாயகன் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments