Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிரிக்கெட் உலகின் ரொனால்டோ கோலி: பிராவோ புகழாரம்!

கிரிக்கெட் உலகின் ரொனால்டோ கோலி: பிராவோ புகழாரம்!
, புதன், 18 ஏப்ரல் 2018 (15:33 IST)
கால்பந்து போட்டிகளில் சிறந்த வீரர்களில் ஒருவராக இருப்பவர் போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் விளையாட்டு மட்டுமின்றி தனது உயற்தகுதியில் கவனம் செலுத்துபவர். 
 
இதுபோல நம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளையாட்டில் கவனம் செலுத்துவது போல, உடற்தகுதியிலும் கவனம் செலுத்தி வருகிறார். 
 
இந்நிலையில், சிஎஸ்கே வீரர் பிரவோ கோலி பற்றி பேசியுள்ளார். பிரவோ பேசியதாவது, விராட் கோலியை கிறிஸ்டியானோ ரொனால்டோவுன் ஒப்பிடுவது சிறந்தது. விராட் கோலி 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் எனது இளைய சகோதரரான டேரன் பிராவோ உடன் விளையாடியுள்ளார். 
 
நான் விராட் கோலியை பார்க்கும்போது, கிரிக்கெட்டில் ரொனால்டோவை பார்க்கிறேன். ஒரு கிரிக்கெட்டராக விராட் கோலி இந்திய அணிக்காகவும், ஆர்சிபிக்காவும் சிறப்பாக விளையாடி வருகிறார். 
 
அவரது திறமையை நான் பாராட்டுகிறேன். அவர் ஈடுபாட்டுடன் விளையாடும் கிரிக்கெட்டை வைத்து பார்க்கும்போது அனைத்து சாதனைகளுக்கும் கோலி தகுதியானவர் என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு இது வேண்டாம்; தோல்வி வருத்தத்தில் கோஹ்லி