Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணிக்கு வந்த சோதனை; 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து புவனேஷ்வர் விலகல்!

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2017 (14:42 IST)
இந்தியா - இலங்கை ஆகிய அணிகள் இடையே நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து புவனேஷ்வர் குமார் மற்றும் தவான் ஆகியோர் விலகியுள்ளனர்.


 
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
 
முதல் இன்னிங்ஸில் தடுமாறிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் அதிரவைத்தது. நேற்று 5வது நாள் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு தோல்வி பயத்தை அளித்தது இந்திய அணி. புவனேஷ்வர் குமாரின் மிரட்டலான பந்துவீச்சில் இலங்கை அணி அதிர்ந்தது.
 
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 24ஆம் தேதி தொடங்கவுள்ளது. 2வது 3வது டெஸ்ட் போட்டியில் புவனேஷ்வர் குமார் திருமணம் காரணமாக பங்கேற்க மாட்டார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான ஷிக்கர் தவான் சொந்த காரணம் கருதி 2வது டெஸ்ட் போடியில் மட்டும் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருந்த 2 வீரர்களும் அடுத்த போட்டியில் இருந்து விலகி உள்ளனர். இதனால் இந்தியாவுக்கு சோதனை காலம் ஏற்பட்டுள்ளது. தவான் மற்றும் புவனேஷ்வர் விலகல் செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments