கிரிக்கெட் இணையதளமான இ.எஸ்.பி.என். கிரிக் இன்போ சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
2016-17 விருதுகள் பெரும் வீரர்களின் பட்டியலை இ.எஸ்.பி.என். தேர்வு கமிட்டி அறிவித்தது.
# சிறந்த கேப்டன் விருது: இந்திய கேப்டன் விராட்கோலி.
# சிறந்த டெஸ்ட் பேட்ஸ் மேன் விருது: இங்கிலாந்து பேட்ஸ்மேன் பென் ஸ்டோக்ஸ்.
# சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளர் விருது: இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்.
# சிறந்த ஒருநாள் பேட்ஸ் மேன் விருது: தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டான் டி காக்.
# சிறந்த ஒருநாள் பந்து வீச்சாளர் விருது: வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின்.
# 20 ஓவர் போட்டியின் சிறந்த பேட்ஸ் மேன் விருது: வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராத்வெய்ட்.
# 20 ஓவர் போட்டியில் சிறந்த பந்து வீச்சாளர் விருது: வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிகுர் ரஹ்மான்.
# சிறந்த அறிமுக வீரர் விருது: வங்காளதேச இளம் வீரர் மெஹதி ஹசன் மிராஸ்.