நேற்று நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
நேற்றைய போட்டியில் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார். நேற்று அவர் 84 ரன்கள் அடித்தார். இதில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தொடர் ஆட்டநாயகனாக நியூசிலாந்து அணியின் வில்லியம்சன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். இவர் இந்த தொடரில் மொத்தம் 548 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதுவரை நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஆட்டநாயகனாக தேர்வு பெற்றவர்கள் குறித்த விவரங்களைப் பார்ப்போம்.
கடந்த 1975ஆம் ஆண்டில் கிளைவ் லாயிட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் முதல் உலக கோப்பையில் முதல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமை இவருக்கு உண்டு
கடந்த 1979 ஆம் ஆண்டு விவியன் ரிச்சர்ட்ஸ் அவர்களும் 1983 ஆம் ஆண்டு மொஹிந்தர் அமர்நாத் அவர்களும், 1987 ஆம் ஆண்டு டேவிட் பூன் அவர்களும், 1992ம் ஆண்டு வாசிம் அக்ரம் அவர்களும், 1996 ஆம் ஆண்டு அரவிந்த டீ சில்வா அவர்களும், 1999 ஆம் ஆண்டு ஷேன் வார்னே, அவர்களும் 2003 ஆம் ஆண்டு ரிக்கி பாண்டிங் அவர்களும், 2007 ஆம் ஆண்டு ஆடம் கில்கிரிஸ்ட் அவர்களும், 2011 ஆம் ஆண்டு எம்எஸ் தோனி அவர்களும், 2015 ஆம் ஆண்டு ஜேம்ஸ் ஃபால்க்னர் அவர்களும் இதுவரை உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது