Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2011 ஆம் ஆண்டு உலககோப்பை… போட்டிகளுக்கு முன்னர் வீரர்களுக்கு உடலுறவு ஆலோசனை – சர்ச்சையைக் கிளப்பும் புத்தகம்!

Advertiesment
2011 ஆம் ஆண்டு உலககோப்பை… போட்டிகளுக்கு முன்னர் வீரர்களுக்கு உடலுறவு ஆலோசனை – சர்ச்சையைக் கிளப்பும் புத்தகம்!
, திங்கள், 5 ஜூலை 2021 (10:16 IST)
2011  ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போட்டிகளுக்கு முன்னர் இந்திய வீரர்களுக்கு உடலுறவை பரிந்துரை செய்ததாக அப்போதைய மன நல ஆலோசகர் பேடி உப்டன் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் வரை இந்திய கிரிக்கெட் அணியின் மன நல ஆலோசகராக இருந்தவர் பேடி உப்டன். இவர் இந்திய அணியுடனான தனது அனுபவங்கள் குறித்து தி பேர் ஃபுட் கோச் எனும் புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் பல ரகசியங்களை தெரிவித்துள்ள அவர் ‘2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் போது இந்திய வீரர்கள் போட்டிக்கு முன்னர் உடலுறவுக் கொள்ளுமாறு பரிந்துரை செய்யப்பட்டனர். அது அவர்களின் ஆட்டத்திறனை மேம்படுத்தும் என்பதற்காக சொல்லப்பட்டது. அதற்கு பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னர் ஒத்துக்கொண்டார். மேலும் வீரர்களுக்கு உடலுறவுக் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்பா.. ஜெர்மனி தோத்து போச்சுப்பா..! – கதறி அழுத சிறுமிக்கு ஆன்லைனில் திரண்ட நிதி!