இந்திய அணியில் இப்போது ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இடையே நீரு பூத்த நெருப்பாக பகையுணர்வு தோன்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோலியின் பேட்டிங் மிகவும் மந்தமாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் சமீபத்தில் டி 20 அணிக்கான கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் அவர் ஒரு நாள் அணிக்கான கேப்டன் பதவியிலும் தொடர்ந்து நீடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல இருக்கும் அணித்தேர்வு இன்று சேத்தன் சர்மா தலைமையில் நடக்கிறது. இதில் செல்லும் வீரர்கள் மற்றும் அணித்தலைவர் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் போட்டித்தொடரும் இருப்பதால் அந்த அணிக்கு கேப்டனாக கோலியே தொடர்ந்து செயல்படுவாரா இல்லை ரோஹித் ஷர்மாவை நியமிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரையும் அமர வைத்து பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.