Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே.இ.தீவுகள் தொடர்: இந்திய அணி வீரர்களின் தேர்வு திடீர் ஒத்திவைப்பு

Webdunia
வெள்ளி, 19 ஜூலை 2019 (08:20 IST)
இந்திய கிரிக்கெட் அணி வரும் ஆகஸ்ட் மாதம் மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடவுள்ளது. இந்த தொடரில் மூன்று டி20 போட்டிகள் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் விளையாடவுள்ளன
 
முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதியும், 2வது டி20 போட்டி ஆகஸ்ட் 4ம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி ஆகஸ்ட் 6ம் தேதியும் நடைபெற உள்ளது. அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் 8 , ஆகஸ்ட் 11 மற்றும் ஆகஸ்ட் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 22ம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், ஆகஸ்ட் 30 ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது 
 
இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் தொடரில் விளையாடும் இந்திய வீரர்களை பட்டியல் மும்பையில் இன்று அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் திடீரென இந்திய கிரிக்கெட் வீரர்களின் தேர்வை பிசிசிஐ ஒத்திவைத்துள்ளது. நாளை மறுநாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மும்பையில் இன்று நடைபெற இருந்த இந்திய அணி தேர்வை பிசிசிஐ ஒத்திவைத்துள்ளதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

எக்ஸ்போஸ் ஆகிவிட்டதா தோனி மேஜிக்… ரசிகர்களே ஓய்வு பெற சொல்லி புலம்பல்!

அடுத்த கட்டுரையில்
Show comments