மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா நடத்தாது என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் வரும் அக்டோபர் மாதம் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்கான அட்டவணை கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் வங்கதேசத்தில் தற்போது அரசியல் குழப்பநிலை இருப்பதால் வேறு நாட்டுக்கு மாற்றப்படலாம் என்று குறிப்பாக இந்தியாவுக்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, வங்கதேசத்தின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் மகளிர் டி20 உலகக்கோப்பை நடத்துவதற்கு பிசிசிஐ கோரிக்கை விடுத்த நிலையில் மழைக்காலம் என்பதால் இந்தியாவில் நடத்த முடியாது என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது என்றும் கூறினார்.
மேலும் அடுத்த ஆண்டு ஒரு நாள் மகளிர் உலகக் கோப்பையை இந்தியா நடத்துவதால் அடுத்தடுத்து இரண்டு உலகக் கோப்பையை நடத்தும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் பிங்க் பால் டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் நடத்தும் எண்ணம் இல்லை என்றும் இந்தியாவில் இரண்டு நாட்களில் பிங்க் பால் டெஸ்ட் போட்டி முடிந்து விடும் என்றும் அதனால் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.