வெற்றியை நோக்கி வங்கதேசம்: நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறல்!
நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே ஜனவரி 1ஆம் தேதி ஆரம்பித்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியை 328 ரன்கள் குவித்தது என்பதும் இதனை அடுத்து பேட்டிங் செய்த வங்கதேச அணி 458 ரன்கள் குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது 2வது இன்னிங்சை நியூசிலாந்து அணி விளையாடி வரும் நிலையில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து திணறி வருகிறது
தற்போது வெறும் 17 ரன்கள் மட்டுமே முன்னிலையில் நியூசிலாந்து உள்ள நிலையில் மிகக் குறைந்த இலக்கையே வங்கதேச அணிக்கு கொடுக்கும் என தெரிகிறது. எனவே வங்கதேச அணி இந்த போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.