Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20: இந்தியா அதிர்ச்சி தோல்வி

Webdunia
ஞாயிறு, 3 நவம்பர் 2019 (22:44 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் டெல்லியில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அதிர்ச்சி கொடுத்தது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழக்க, நன்றாக ஆடிக்கொண்டிருந்த தவான் 41 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். இதன்பின்னர் ரிஷப் பண்ட் 27 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 22 ரன்களும் எடுத்ததை அடுத்து இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 148 ரன்கள் எடுத்தது
 
149 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 154 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச அணியின் ரஹிம் அதிரடியாக விளையாடி 60 ரன்களும் சர்கார் 39 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து வங்கதேச அணி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது
 
இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி ராஜ்கோட்டில் வரும் 7ஆம் தேதி நடைபெறும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments