Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2வது டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியா தோல்வி: வங்கதேசம் அபாரம்

2வது டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியா தோல்வி: வங்கதேசம் அபாரம்
, புதன், 4 ஆகஸ்ட் 2021 (21:56 IST)
2வது டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியா தோல்வி: வங்கதேசம் அபாரம்
ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே டி20 தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற முதல் டி20 தொடரில் வங்கதேச அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது 
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற 2வது டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்களுக்குள் சுருண்டது 
 
ஆனால் வங்கதேச அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து வங்கதேசம் இந்த தொடரில் 2-0  என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி வரும் 6ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. சொந்த மண்ணில் வங்கதேசம் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து இன்னுமொரு போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி தொடரை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய பெண்கள் ஹாக்கி அணி போராடித் தோல்வி!