நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி கிரிக்கெட் தொடரில் மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்ததால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்தது
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 167 ரன்கள் எடுத்தது.
168 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே இஷான்கான் விக்கெட்டையும், 4வது ஓவரில் யாதவ் மற்றும் ரோஹித் சர்மாவின் விக்கெட்டையும் இழந்து தத்தளித்தது. இருப்பினும் பாண்டியா அதிரடியாக விளையாடி 50 ரன்கள் குவித்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 153 ரன்கள் எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் டிம் செளதி ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 6 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.