Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளில்லாத மைதானம்… பந்துகளைத் தேடிய பீல்டர்கள் – முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி !

Webdunia
சனி, 14 மார்ச் 2020 (07:50 IST)
ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியுசிலாந்து அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கொரோனா பீதி அதிகமாக இருப்பதால் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் இல்லாத காலியான மைதானத்தில் போட்டி நடந்தது.

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வார்னர், பின்ச் மற்றும் லபுஷான் ஆகியோரின் அரைசதத்தால் 258 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தினறினர். அந்த அணியில் ஒருவர் கூட நிலைத்து நின்று விளையாடாததால் போட்டி 41 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதனால் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது வீரர்களே சிக்ஸர்களுக்கு சென்ற பந்துகளை தேடி எடுத்தது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

‘டேய் அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான்டா’ எனக் கதறும் பவுலர்கள்.. 52 பந்துகளில் சதமடித்து அசத்திய சூர்யவன்ஷி!

அடுத்த கட்டுரையில்
Show comments