Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!

aus won
, வெள்ளி, 3 மார்ச் 2023 (11:12 IST)
9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மார்ச் 1ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 109 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 163 ரன்களும் எடுத்துள்ள நிலையில்ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 197 ரன்கள் எடுத்திருந்தது
 
இதனை அடுத்து 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களத்தில் இறங்கி உள்ள ஆஸ்திரேலியா அணியின் முதல் விக்கெட் இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே விழுந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் காவஜா ரன் ஏதும் எடுக்காமல் இரண்டாவது பந்திலையே அஸ்வின் பந்துவீச்சில் அவுட் ஆனாலும் அதன்பின் களத்தில் இருந்த ஹெட் மற்றும் லாபுசாஞ்சே அபாரமாக விளையாடி இலக்கை எட்டினர்.  ஹெட் 49 ரன்களும், லாபுசாஞ்சே 28 ரன்களும் எடுத்துள்ளனர்.
 
இந்த நிலையில் இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தபோதிலும் இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2வது இன்னிங்ஸில் சரிய தொடங்கும் ஆஸ்திரேலிய விக்கெட்.. வெற்றி யாருக்கு?