Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்த ஆறுதல் வெற்றி: தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து!

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (09:49 IST)
ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்த ஆறுதல் வெற்றி: தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து!
கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த தொடரில் ஏற்கனவே இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் களமிறங்கியது
 
தொடக்க ஆட்டக்காரர் பெயர்ஸ்டோவில் அதிரடி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 146 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்ததை அடுத்து அந்த அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்த போட்டியின் சிறந்த ஆட்டக்காரராக மிட்செல் மைக்கலும், தொடர் நாயகனாக பட்லரும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் இருநாட்டு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 11ம் தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் ஏலம்: வீரர்கள் தேர்வில் வித்தியாசம் காட்டிய சிஎஸ்கே - அணியை ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய குறை!

ஆண்டர்சன் முதல் சர்பராஸ் கான் வரை… ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்கள் பட்டியல்!

பெங்களூர் அணியினரைக் கட்டியணைத்து நன்றி சொன்ன ஆகாஷ் அம்பானி… எதற்குத் தெரியுமா?

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை.. 13 வயது சிறுவனை ஏலத்தில் எடுத்த அணி..!

மீண்டும் சிஎஸ்கே அணியில் ‘சுட்டி குழந்தை’ சாம் கரண்: ரூ. 2.4 கோடிக்கு ஏலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments