இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 260 ரன்களில் ஆட்டமிழந்தது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டி, புனேவில் நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதல் நாள் ஆட்ட முடிவில், ஆஸ்திரேலியா 9 விக்கெட்களை இழந்து, 256 ரன்களை சேர்த்திருந்தது.
2வது நாள் போட்டி இன்று காலை தொடங்கியது. தொடங்கியவுடன் 260 ரன்களில் ஆஸ்திரலேய அணி, முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை முடித்துக் கொண்டது.
இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களும் சாய்த்தனர். ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.