முதல் நாள் முடிவில் வலுவான ஸ்கோரில் ஆஸ்திரேலியா!

Webdunia
வெள்ளி, 15 ஜனவரி 2021 (13:55 IST)
முதல் நாள் முடிவில் வலுவான ஸ்கோரில் ஆஸ்திரேலியா!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று தொடங்கிய 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது
 
இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டுக்களை முதலிலேயே இழந்தது. அதன்பின்னர் நடராஜன் மற்றும் சிராஜ் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக 5 விக்கெட்டுகள் விழுந்தாலும் லாபிசாஞ்சேவின் அபாரமான ஆட்டம் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அவர் 204 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வேட் 45 ரன்கள் அடித்தார் 
 
இந்த நிலையில் இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 274 என்ற வலுவான ஸ்கோரில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 5 விக்கெட்டுக்கு கையில் இருப்பதால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 400 ரன்களை நெருங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இந்திய அணி நாளை ஆஸ்திரேலிய அணியை விரைவில் வீழ்த்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக்கோப்பையை வென்ற வீராங்கனைகள் அனைவருக்கும் அசத்தல் பரிசு.. டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!

இந்த வருஷமும் definitely not தான்… தோனி குறித்து அப்டேட் கொடுத்த காசி விஸ்வநாதன்!

RCB அணியை விற்க நேரம் குறித்த இங்கிலாந்து நிறுவனம்…! அதானி வாங்குகிறாரா?

மகளிர் உலகக்கோப்பை நட்சத்திரங்கள்: தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷை கௌரவப்படுத்த ஈஸ்ட் பெங்கால் கிளப் திட்டம்!

ஏபிடி தயவு செஞ்சு எனக்கு அந்த விஷயத்துல உதவி செய்ங்க… சூர்யகுமார் யாதவ் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments