Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய பவுலர்கள் அபாரம்- 235 ரன்னுக்கு ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா

Webdunia
சனி, 8 டிசம்பர் 2018 (08:45 IST)
ஆஸ்திரேலியாவுக்கு முதல் டெஸ்ட்டின் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில்  235  ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

இந்தியா அஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று அடிலெய்டில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய இந்தியா முன்வரிசை ஆட்டக்காரர்களின் சொதப்பலான ஆட்டத்தால் தடுமாறியது. இந்திய அணியை புஜாராவின் தனது சிறப்பான ஆட்டத்தால் கௌரவமான ஸ்கோரை எட்ட உதவினார். முதல் இன்னிங்ஸில் இந்தியா 250 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்களும் ஸ்டார்க், கம்மின்ஸ், லியான் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

அடுத்து நேற்றுக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியும் இந்தியப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் மட்டும் நிலைத்து நின்று ரன்கள் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டார். மற்ற வீரர்கள் அனைவரும் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் தங்கள் விக்கெட்களை இழந்து வெளியேறினர். நேற்றைய ஆட்டநேர முடிவில் 191 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்திருந்தது.

அதையடுத்து இன்று களமிறங்கிய ஆஸ்திரேலியா மேற்கொண்டு 44 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணி சார்பில் டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 72 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி சார்பில் பூம்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட்களும், இஷாந்த் ஷர்மா மற்றும் ஷமி 2 விக்கெட்களும்  வீழ்த்தி அசத்தினர்.

இதையடுத்து இந்தியா 15 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. உணவு இடைவேளைக்குப் பிறகு இந்தியா பேட் செய்ய உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே திடீரென இந்தியா திரும்பிய கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments