Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2020… முதல் போட்டியிலேயே ஆஸி மற்றும் இங்கிலாந்து வீரர்கள் – ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2020 (11:44 IST)
ஐபில் 2020 தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த 29 வீரர்கள் விளையாட முடியாத சூழல் இருந்த நிலையில் இப்போது அது சரிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தள்ளிப்போன ஐபிஎல் போட்டிகள் ஒருவழியாக செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை நடக்க இருப்பதாக பிசிசிஐ கடந்த வாரம் அறிவித்தது. ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் சற்றுமுன் அளித்த பேட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

இதற்காக எல்லா அணி வீரர்களும் தங்கள் வீரர்களை அமீரகத்துக்கு அனுப்பும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஐபிஎல் தொடரின் முதல் பாதி முழுவதும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளைச் சேர்ந்த 29 வீரர்கள் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.

ஏனென்றால் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே செப்டம்பர் 4 ஆம் தேதி தொடங்கும் தொடருக்காக ஆஸ்திரேலிய வீரர்கள் இங்கிலாந்துக்கு செல்ல உள்ளனர். அந்த தொடரை முடித்து செப்டம்பர் 18 ஆம் தேதிதான் திரும்புகிறார்கள். அதனால் அவர்கள் இங்கு வந்ததும் தனிமைப்படுத்திக் கொண்டு 6 நாட்களுக்குப் பிறகே விளையாடமுடியும் என்ற சூழல் உருவானது. ஆனால் இப்போது பிசிசிஐ வீரர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை எனக் கூறிவிட்டதால் முதல் போட்டியில் இருந்தே அவர்கள் விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் டெஸ்ட்டில் நிதீஷ் குமாருக்கு வாய்ப்பு… பவுலிங் பயிற்சியாளர் பகிர்ந்த தகவல்!

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: 3-வது முறையாக சாம்பியன் ஆனது இந்தியா..!

கோலியைக் கொண்டாடும் ஆஸி ஊடகங்கள்.. ஆனால் உளவியல் ரீதியாகத் தாக்கும் ஆஸி வீரர்கள்…!

அவர் இருந்திருந்தா நாங்க எல்லாம் களைப்பாகிவிடுவோம்… இந்திய வீரர் குறித்து நிம்மதி பெருமூச்சு விட்ட ஆஸி பவுலர்!

கடைசி போட்டியில் தோல்வி.. கண்ணீருடன் ஓய்வு பெறுகிறார் ரஃபேல் நடால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments