ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கிய ஹரியானா மாநில வீராங்கனைக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை அஞ்சலிதேவி என்பவர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது குறித்து நடத்தப்பட்ட சோதனையில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது
இந்த நிலையில் அவருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை காலத்தில் அவர் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தோகா சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் அஞ்சலிதேவி பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஊக்க மருந்து பயன்படுத்தியதன் காரணமாக வீராங்கனை அஞ்சலிதேவிக்கு 4 ஆண்டுகள் தடை என்று அறிவிப்பு வீராங்கனைகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.