Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐந்தாவது டெஸ்ட்… அஸ்வினுக்கு கண்டிப்பாக இடம் உண்டு – ஏன் தெரியுமா?

ஐந்தாவது டெஸ்ட்… அஸ்வினுக்கு கண்டிப்பாக இடம் உண்டு – ஏன் தெரியுமா?
, புதன், 8 செப்டம்பர் 2021 (11:02 IST)
ஐந்தாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடக்க உள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓவல் டெஸ்ட்டை 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலைப் பெற்று தொடரை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது. ஓவல் டெஸ்ட்டின் ஆரம்பத்தில் மோசமாக விளையாடினாலும் பின்னர் சுதாரித்து விஸ்வரூபம் எடுத்து வெற்றியைக் கைப்பற்றியது. ஓவலில் 50 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் இந்திய அணித் தேர்வு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரஹானேவின் பேட்டிங் மோசமாக இருந்தும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படுகிறது. அதே போல ஜாம்பவான் பவுலரான அஸ்வினுக்கு ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஐந்தாவது டெஸ்ட்டில் கண்டிப்பாக வாய்ப்புக் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

ஏனென்றால் போட்டி நடக்கும் மான்செஸ்டர் மைதானம் சுழல் பந்து வீச்சுக்கு உகந்தது. அதனால்தான் இங்கிலாந்து அணியில் ஜாக் லீச் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதனால் கண்டிப்பாக அஸ்வினும் அணியில் இணைவார் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐந்தாவது டெஸ்ட்டுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!