Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் அலட்சியமாக இருக்கிறார்கள் – அஸ்வின் ஆதங்கம் !

Webdunia
திங்கள், 16 மார்ச் 2020 (16:23 IST)
கொரோனா வைரஸ் பற்றிய எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்காமல் மக்கள் அலட்சியமாக இருப்பதாக அஸ்வின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இதுவரை 5200க்கும் மேற்பட்டவர்களை பலி கொண்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டு 2 பேர் பலியாகியுள்ளனர். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகமூடி அணிந்து செல்லுதல், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்டவைகளை செய்யுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால் இவற்றை தமிழக மக்கள் யாரும் சரியாகப் பின்பற்றவில்லை என தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக தனது டிவிட்டர் பக்கத்தில் ‘கூட்டமாக கூடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டதை சென்னை மக்கள் இன்னமும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. சென்னையின் வெப்ப நிலையால் கரோனா பாதிப்பு இருக்காது என அவர்கள் நினைத்திருக்கலாம். அல்லது தங்களை வைரஸ் தாக்காது என அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கலாம்’ எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சிஎஸ்கே அணியில் ‘சுட்டி குழந்தை’ சாம் கரண்: ரூ. 2.4 கோடிக்கு ஏலம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்… மீண்டும் முதலிடத்துக்கு சென்ற இந்தியா!

கோலி ஃபார்முக்கு திரும்பிவிட்டாரா?... பும்ரா அளித்த நச் பதில்!

என்னை அவர்தான் வழிநடத்தினார்… ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்தியா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments