Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஸ்வின் உட்பட 15 பேருக்கு அர்ஜூனா விருது

அஸ்வின் உட்பட 15 பேருக்கு அர்ஜூனா விருது
, புதன், 13 ஆகஸ்ட் 2014 (08:36 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் உட்பட 15 பேர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஸ்குவாஷ் வீராங்கனை அனகா அலங்காமணி உட்பட 15 பேர் அர்ஜூனா விருது பெறுகிறார்கள். இந்த ஆண்டில் கேல் ரத்னா விருது யாருக்கும் பரிந்துரைக்கப்பட வில்லை.

இதனால் விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘கேல் ரத்னா’ விருதுக்கு, முதல் முறையாக இந்த ஆண்டு யாரும் தேர்வு செய்யப்படவில்லை.

டென்னிஸ் வீரர் சோம்தேவ் தேவ்வர்மன், வட்டு எறிதல் வீராங்கனை கிருஷ்ண பூனியா, பி.வி.சிந்து (பேட்மின்டன்), விகாஸ் கவுடா (வட்டு எறிதல்) ஆகியோரது பெயர்கள் கேல் ரத்னா விருதுக்கான பரிசீலனையில் இருந்த நிலையில், இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையிலான தேர்வுக் குழுவினர் யாருடைய பெயரையும் பரிந்துரை செய்யவில்லை.

அர்ஜுனா விருது பெறும் 46 ஆவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமை தமிழகத்தைச் சேர்ந்த அஷ்வினுக்கு கிடைக்க உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 100 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். அவர் இதுவரை 20 டெஸ்ட், 79 ஒருநாள் மற்றும் 25 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.

அஷ்வின், டெஸ்ட் போட்டியின் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil