Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியும் கோலியும் கிடைத்தது இந்தியாவின் அதிர்ஷ்டம்; நெஹ்ரா புகழாரம்

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (11:56 IST)
தோனியும், கோலியும் இருப்பது இந்திய அணியின் அதிர்ஷ்டம் என வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.


 

 
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்றுடன் ஒருநாள் போட்டி முடிவடைந்தது. இதில் இந்தியா அணி 2-1 என்ற புள்ளி கணக்கில் தொடரை வென்றது.
 
ரோகித சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சதம் அடித்து அணிக்கு ரன் குவித்தனர். புவனேஸ்வர் மற்றும் பும்ரா கடைசி நேரத்தில் சிறப்பான பந்து வீசி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இதன் மூலம் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது.
 
இந்த தொடரை வென்றது மூலம் இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. தொடர்ச்சியாக 7 ஒருநாள் போட்டி தொடரை வென்று இந்திய அணி புது சாதனை படைத்துள்ளது. விராட் கோலி சதம் அடித்ததை பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பாரட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா, முன்னாள் கேப்டன் தோனி மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் அணியில் இருப்பது இந்திய அணியின் அதிர்ஷ்டம் என கூறியுள்ளார். அடுத்து நடைபெற உள்ள டி20 போட்டியில் நெஹ்ரா தேர்வாகியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு நடைபெறும் டி20 போட்டியுடன் அவர் ஓய்வு பெறுகிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments