ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பர் 4ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாக்கிய போதிலும் அடுத்து களமிறங்கிய ஸ்மித் அதிரடியாக விளையாடினார். அவரை அவுட்டாக இங்கிலாந்து பவுலர்கள் பெரும் முயற்சி செய்தும் முடியவில்லை. ஸ்மித் மிக அபாரமாக விளையாடி 319 பந்துகளில் 211 ரன்கள் அடித்தார். இதில் 24 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மித் இரட்டை சதத்தால் ஆஸ்திரேலிய அணி 126 ஓவர்களில் 497 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது
இதனை அடுத்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான டென்லி 4 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இங்கிலாந்து அணி தற்போது 474 ரன்கள் பின்னணியில் உள்ள நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. இன்றைய நாளில் ஆஸ்திரேலியாவுக்கு இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பதிலடி கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்