Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலியை கலாய்த்த அனுஷ்கா சர்மா! இன்ஸ்டாவில் வைரலாகும் கமெண்ட்!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (10:18 IST)
விராட் கோலி தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ச்சியான கமெண்ட் ஒன்றை இட்டிருந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலி தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடி வருவதால் இப்போது நியுசிலாந்துக்கு எதிரான தொடரில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் நேரடியாக வந்து கலந்துகொள்ள இருக்கிறார்.

இப்போது குடும்பத்தினரோடு ஓய்வில் இருக்கும் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவோடு இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதில் ‘நீ என்னுடன் இருக்கும் போது அது எந்த இடமாக இருந்தாலும் என் வீடுதான்’ எனக் கூறியிருந்தார். இந்த புகைப்படத்தில் கமெண்ட் செய்த அனுஷ்கா சர்மா ‘அது சிறப்பானதுதான் ஏனென்றால் நீங்கள் எப்போதாவதுதான் வீட்டுக்கு வருகிறீர்கள்’ எனக் கலாய்த்துள்ளார். இந்த கமெண்ட் கோலி தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதை கேலி செய்யும் விதமாக அமைந்துள்ளதால் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

மேக்ஸ்வெல்லின் செயலால் கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்…!

வாரி வழங்கும் வள்ளல் ஆன ஷமி… நேற்றையப் போட்டியில் படைத்த மோசமான சாதனை!

தோனி, அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா?... கடுமையாக விமர்சித்த மனோஜ் திவாரி!

அடுத்த கட்டுரையில்
Show comments