Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தடுப்பூசி போட்டால்தான் மதுபானம்; மதுப்பிரியர்களுக்கு கேட் போட்ட அமைச்சர்!

Advertiesment
தடுப்பூசி போட்டால்தான் மதுபானம்; மதுப்பிரியர்களுக்கு கேட் போட்ட அமைச்சர்!
, ஞாயிறு, 28 நவம்பர் 2021 (12:50 IST)
தமிழகத்தில் இனி இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் டாஸ்மாக்கில் மதுபானம் வழங்க உத்தரவிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருந்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் பாதிப்புகள் மெல்ல குறைந்தது.

இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க பொது இடங்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என 19ம் தேதி தமிழக அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் போன்றவற்றில் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது பேசியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் மதுபானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கான உரிய வழிமுறைகள் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக வலியுறுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதில் தாமதம் – வானிலை ஆய்வு மையம்