நிறைவடைந்தது குளிர்கால பாராலிம்பிக் போட்டி: பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்
, செவ்வாய், 20 மார்ச் 2018 (10:45 IST)
தென்கொரியாவில் நிறைவடைந்த குளிர்கால பாராலிம்பிக் போட்டியில் 36 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.
தென்கொரியாவில் உள்ள பியாசாங் நகரில் மாற்றுதிறனாளிகள் பங்கேற்கும் 12-வது குளிர்கால பாராலிம்பிக் போட்டிகள் கடந்த மார்ச் 9-ஆம் தேதி கோலகலமாக தொடங்கியது. இந்த பாராலிம்ப்க் போட்டியில் உறைபனியில் விளையாடும் பனிசறுக்கு, ஐஸ் ஹாக்கி உள்ளிட்ட ஆறு வகையான போட்டிகள் நடைபெற்றன.
இதில் அஸ்திரேலியா, அமெரிக்கா, ஈரான், சீனா, பிரேசில், கனடா உள்ளிட்ட 49 நாடுகளின் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் போது ரஷ்ய வீரர் ஒருவர் ஊக்க மருந்து பயன்படுத்தியதால். பாராலிம்பிக் ஒலிம்பிக் கமிட்டி, ரஷ்ய நாட்டு வீரர்களை போட்டியில் பங்கேற்க அனுமதிக்கவில்லை.
இந்நிலையில், நேற்று பாராலிம்பிக் போட்டி நிறைவடைந்தது. இந்த போட்டியில் அமெரிக்கா அணி 13 தங்கம், 15 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது. தனிப்பட்ட வீரர்களாக களமிறங்கியவர்கள் 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என 24 பதக்கங்கள் வென்று இரண்டாவது இடம் பிடித்தனர். மூன்றாவது இடத்தை கனடாவும், நான்காவது இடத்தை பிரான்ஸூம், ஐந்தாவது இடத்தை ஜெர்மனியும் பிடித்துள்ளன.
அடுத்த கட்டுரையில்