Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்துவிதமான உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் ரத்து: ஐபிஎல் என்ன ஆகும்?

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (07:30 IST)
தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகம் கேரளா மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மட்டும் 80 சதவீதத்துக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரு சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு பார்வையாளர்கள் அனுமதி கிடையாது என அதிரடியாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது பிசிசிஐ மேலும் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து விதமான உள்ளூர் கிரிக்கெட் தொடர்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் 
 
ஆனால் அதே நேரத்தில் ஐபிஎல் போட்டி குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதால் ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் கடந்த ஆண்டு போலவே ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தப்படும் என தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய வெற்றியை மழை தடுத்துவிடுமா? கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!

இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments