Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிக்குப் பின் அறிமுக வீரர்களைப் பாராட்டிய ரஹானே!

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (10:43 IST)
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து கேப்டன் ரஹானே அறிமுக வீரர்களான சிராஜ் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர்களை பாராட்டியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி கடந்த 26ஆம் தேதி தொடங்கிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் ஆடிய இந்திய அணி கேப்டன் ரஹானேவின் சதத்தால் 326 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 131 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் தொடர்ந்து ஆடிய ஆஸி அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் 200 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதையடுத்து இந்திய அணி வெற்றிக்கு தேவையான 70 ரன்களை 2 விக்கெட்களை மட்டுமே இழந்து எடுத்தது. இதன்மூலம் அடிலெய்ட் டெஸ்ட்டில் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பழிதீர்த்துள்ளது.

பெருமைமிகு இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டனும் ஆட்டநாயகனுமான அஜிங்க்யா ரஹானே ‘இந்த வெற்ற்யின் முழுப்பொறுப்பும் அறிமுக வீரர்களான முகமது சிராஜ் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரைச் சேரும். ஒட்டுமொத்தமாக அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடினார்கள். எங்களின் திட்டங்கள் கைகொடுத்தன. அடிலெய்ட் டெஸ்ட் எங்கள் கையில் இருந்து ஒரு மணிநேரத்தில் சென்றது. அதிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டுள்ளோம்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments