ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்றுபயண ஆட்டம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்க்ஸ் நடந்து வந்த நிலையில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றுள்ளது.
முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா 195 ரன்கள் எடுத்த நிலையில் அசுரகதியாய் விளையாடிய இந்தியா 326 ரன்களை ஸ்கோர் செய்தது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா மூச்சு விடாமல் விளையாடினாலும் க்ரீன் மட்டும் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் இந்தியாவின் அசுரகதியான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் குறைந்த ரன்களிலேயே அவுட் ஆனார்கள். இதனால் ஆஸ்திரேலியா 200 ரன்கள் ஸ்கோர் செய்திருந்தது.
இந்நிலையில் இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 70 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. அடுத்ததாக களமிறங்கிய இந்தியாவின் தொடக்க பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் 5 ரன்களில் ஆட்டம் இழந்தாலும் நின்று நிதானமாக விளையாடிய சுப்மன் கில், ரஹானே 15 ஓவர்களுக்கு 70 ரன்களை சுருட்டி வெற்றியை ஈட்டினர். இதனால் 4 டெஸ்ட் கொண்ட போட்டியில் 1-1 என இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.