Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணியில் இருந்து ரஹானா நீக்கமா? அனில்கும்ப்ளே பேட்டி

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2017 (06:31 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்பேன் அஜிங்க்ய ரஹானே கடந்த சில போட்டிகளில் சொதப்பலான பேட்டிங்கை கொடுத்து வந்தபோதிலும் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.




இங்கிலாது போட்டியில் சரியாக சோபிக்காத ரஹானா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் சோபிக்கவில்லை. அவர் கடைசியாக விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 204 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது போட்டியில் ரஹானேவுக்குப் பதிலாக சமீபத்தில் முச்சதம் அடித்த கருண் நாயருக்கு வாய்ப்பளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அனில்கும்ப்ளே பேட்டி ஒன்றில் கூறியதாவது:

 ரஹானேவை நீக்குவது தொடர்பான கேள்விக்கே இடமில்லை. முந்தைய போட்டிகளில் அவர் சிறப்பாக ஆடி ரன் குவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக அவர் தொடர்ச்சியாக ரன் குவித்திருக்கிறார். இந்திய அணியைப் பொறுத்தவரையில் ரஹானேவை நீக்குவது தொடர்பாக இதுவரை ஆலோசிக்கப்படவில்லை. 16 வீரர்களுமே தயார் நிலையில் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கே எல் ராகுலுக்கு நடப்பது நியாயமே இல்லை… கம்பீர் செய்றது சரியில்லை – காட்டமான விமர்சனம் வைத்த ஸ்ரீகாந்த்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணிக்குப் பயிற்சிப் போட்டிகள் கிடையாதா?... காரணம் இதுதான்!

கேப்டனாக அதிக வெற்றிகள்… ரோஹித் ஷர்மா எட்டிய புதிய மைல்கல்!

ரோஹித் சர்மா அபார சதம்.. 305 இலக்கை அசால்ட்டாக எட்டிய இந்தியா..!

2வது ஒருநாள் போட்டி.. இங்கிலாந்து நிதான ஆட்டம்.. விக்கெட் எடுத்த ஜடேஜா, வருண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments