Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்போது ஏன் தோனி? அஜய் ஜடேஜா கேள்வி!

Webdunia
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (17:43 IST)
தோனி இந்திய டி 20 அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்திய டி-20 அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆடுகளத்துக்கு வெளியே இருந்தபடி அணியை அவர் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  டி-20 உலகக் கோப்பை போட்டிக்கு மட்டும் அணியின் ஆலோசகராக இருப்பதற்கு அவர் ஒப்புக் கொண்டதாக டி-20 அணியை அறிவித்தபோது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா கூறினார்.

ஆனால் அவரின் இந்த நியமனம் இப்போது புது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஏற்கனவே தோனி பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடரில் சி எஸ் கே அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் நிலையில் இப்போது இரண்டாவது பதவியைப் பெறுவது பிசிசிஐ விதிகளுக்கு எதிரானது என்று சஞ்சீவ் குப்தா என்பவர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

இதையடுத்து இப்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா ஒரு நேர்காணலில் ‘என்னை விட தோனியின் சிறந்த ரசிகர் யாரும் இருக்க முடியாது. தனக்கு அடுத்த கேப்டனை நியமித்து விட்டு ஓய்வு பெற்றவர் அவர். இப்போது இந்திய அணி கோலி தலைமையில் ரவி சாஸ்திரியின் பயிற்சியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில் தோனி ஏன் ஒரு நாள் இரவில் ஆலோசகராக நியமிக்கப்பட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் இருந்து முழுவதும் விலகுகிறாரா ஹேசில்வுட்?

ஃபாலோ ஆனைத் தவிர்த்ததைக் கொண்டாடிய கம்பீரும் ரோஹித்தும்… என்ன கொடும சார் இது?

ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்திய அணி.. 10 விக்கெட்டில் அசத்தும் பும்ரா-ஆகாஷ் தீப்

வெற்றியுடன் விடைபெற்றார் நியுசிலாந்தின் டிம் சவுத்தீ!

உணவு இடைவேளையின் போது பயிற்சி மேற்கொண்ட கோலி…!

அடுத்த கட்டுரையில்
Show comments