Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2007க்கு பின் மீண்டும் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான்?

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (13:14 IST)
கடந்த 2007 ஆம் ஆண்டில் நடந்த முதலாவது உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் மோதின என்பதும் அதில் இந்தியா அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் இறுதிப்போட்டியில் மோதும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது 
 
தற்போது இந்தியா, பாகிஸ்தான் , இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 நாடுகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.  இதில் நவம்பர் 9ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து நவம்பர் 10ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது. அரையிறுதி சுற்றில் இந்தியா பாகிஸ்தான் இரு அணிகளும் வெற்றி பெற்றால் மீண்டும் இந்தியா பாகிஸ்தான் இறுதி போட்டியில் மோதும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா வெளியேறி விட்ட நிலையில் இந்தியா பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால் மைதானங்களில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழியும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதத்தை மிஸ் செய்த கே.எல்.ராகுல்.. சதத்தை நோக்கி கில்.. டிரா செய்யுமா இந்தியா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது?

முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை இழந்த இந்தியா.. சுதாரித்து விளையாடும் கே.எல்.ராகுல், கில்..!

ஜோ ரூட் 150, பென் ஸ்டோக்ஸ் 141.. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து இமாலய ஸ்கோர்..!

பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்: முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments