Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஒரு வெற்றியால் 10ல் இருந்து 6வது இடம்: ஆப்கானிஸ்தான் அபாரம்..!

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2023 (10:36 IST)
நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அபாரமாக வெற்றி பெற்றதை அடுத்து புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்திலிருந்து ஆப்கானிஸ்தான் அணி ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  
 
நேற்றைய போட்டியில் 283 என்ற மெகா இலக்கை ஆப்கானிஸ்தான் அணி மிகவும் அசால்ட்டாக 49 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. இதனை அடுத்து பத்தாவது இடத்திலிருந்து ஆப்கானிஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் தற்போது  ஆறாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இன்னும் ஒரே ஒரு போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்று விட்டால் மூன்றாவது இடத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணி  இங்கிலாந்தை வென்ற நிலையில் தற்போது பாகிஸ்தானையும் என்று உள்ளது. 
 
இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளிடம் மட்டுமே ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்துள்ளது. இனி அடுத்ததாக அந்த அணிக்கு இலங்கை நெதர்லாந்து  ஆகிய அணிகளுடன் போட்டிகள் இருப்பதால் இன்னும் இரண்டு போட்டிகளில் வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய வெற்றியை மழை தடுத்துவிடுமா? கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!

இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments