மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு இந்தியாவின் டி 20 அணி கேப்டன் பதவி வழங்கப்பட வேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன.
பரபரப்பாக நடந்த முடிந்துள்ள ஐபிஎல் தொடரில் மும்பை அணி டெல்லியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் கோலியை விட ரோஹித்தே சிறந்த கேப்டன் எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக இன்னமும் ரோஹித் சர்மாவை நியமிக்காதது வெட்கக்கேடு. அப்படி அவருக்கு அளிக்கவில்லை என்றால் அது இந்திய அணிக்குதான் துரதிர்ஷ்டம். ஒருவரை கேப்டனாக நியமிக்க அளவுகோல்கள் என்ன என்று தெரியவில்லை? ரோஹித் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். அதனால் விராட் கோலியை ஒரு வடிவத்துக்கும் ரோஹித்தை ஒரு வடிவத்துக்கும் கேப்டனாக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
கம்பீரின் இந்த கருத்துக்கு வர்ணனையாளரும் முன்னாள் இந்திய வீரருமான ஆகாஷ் சோப்ரா பதிலளித்துள்ளார். அதில் ஆர்சிபி அணியை ரோகித் சர்மாவிடம் கொடுத்து, அந்த அணியில் விராட் கோலியும் இருந்திருந்தால், ரோகித் மும்பை இந்தியன்ஸ் வென்றதில் எத்தனைக் கோப்பையை வென்றிருப்பார். இதுதான் என்னுடைய கேள்வி. கோலியின் அணி சரியாக விளையாடவில்லை என்றால், அதற்கு அர்த்த, கோலி தவறு என்பதா?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.