சர்வதேச கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்: என்ன காரணம்? பேரதிர்ச்சியில் ரசிகர்கள்

வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (17:49 IST)
ஸ்காட்லாந்தை சேந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் கொன் டி லாங் மூளைக்கட்டியால் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஸ்காட்லாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான கொன் டி லாங் 1981ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஒரு ஆல் ரவுண்டர். வலது பக்க பேட்ஸ்மேனான இவர்  2015-ம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் அவர் அறிமுகமானார். பல போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இவர் 2015ல் ஆப்கானிஸ்ஹானுக்கு எதிரான சர்வதேச போட்டியில் சிறப்பாக விளையாடினார்.
 
கடந்த  2018-ம் ஆண்டு, மூளைக்கட்டி நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தன. சிகிச்சை பெற்று வந்த கொன் டி லாங் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இவரது மறைவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  இவருக்கு ஒரு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் உலகக்கோப்பை 2019 – பாகிஸ்தான் அணி அறிவிப்பு !