நியூசிலாந்து சென்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா!

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2020 (10:37 IST)
நியூசிலாந்து சென்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா!
உலகம் முழுவதும் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் இன்னொரு பக்கம் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகி விட்டன என்பதும் குறிப்பாக சமீபத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே போட்டிகள் தொடங்க உள்ளது. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்றுள்ளது
 
டிசம்பர் 18ஆம் தேதி முதல் டி20 தொடரும், டிசம்பர் 26 ஆம் தேதி முதல் டெஸ்ட் தொடர் ஆரம்பமாகிறது என்பதும் இந்த தொடரில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து உடன் மூன்று டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்டுகளில் விளையாட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நியூசிலாந்து சென்ற பாகிஸ்தான் அணி கிரிக்கெட் வீரர்களில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது
 
இருப்பினும் இந்த தொடர் கேன்சல் செய்ய வாய்ப்பு இல்லை என்றும் போட்டி தொடங்குவதற்கு இன்னும் இருபது நாட்களுக்கு மேல் இருப்பதால் அதற்குள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமாகி விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

அடுத்த கட்டுரையில்
Show comments