இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே தற்போது இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 399 ரன்கள் எடுத்தது.
இதில் சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். மேலும் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடிய அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 400 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது ஆஸ்திரேலியா அணி விளையாடி வரும் நிலையில் தொடக்க ஆட்டக்காரரான மாத்யூ ஷார்ட் மற்றும் கேப்டன் ஸ்மித் ஆகிய இருவரும் அவுட் ஆகிவிட்டனர். தற்போது ஆஸ்திரேலியா அணி 35 ரன்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது