Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 3வது ஒருநாள் போட்டி: தொடரை வெல்லும் அணி எது?

Webdunia
ஞாயிறு, 28 மார்ச் 2021 (07:40 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 தொடர் முடிவடைந்தது என்பதும் இந்த இரண்டு தொடர்களிலும் இந்தியா வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது இரு அணிகளுக்கும் இடையே ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றிருக்கும் நிலையில் இன்று புனே மைதானத்தில் பகலிரவு போட்டியாக 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும் அணி என்பதால் இன்றைய போட்டியில் இரு அணிகளும் தீவிரமாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கொடுத்த 336 என்ற இலக்கை வெகு எளிதாக இங்கிலாந்து அணி அடைந்து வெற்றி கனியை பறித்துள்ளதை அடுத்து அந்த அணி இன்னும் வலுவாக தான் உள்ளது என்பது உறுதியாகிறது
 
இருப்பினும் இந்திய அணி இன்றைய போட்டியில் வென்று தொடரை வெல்ல வேண்டும் என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணமாக உள்ளது. இன்றைய போட்டியில் நடராஜன் அணியில் இணைக்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அவர் அணிகளின் இருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

வெற்றியே காணாத ராஜஸ்தான்.. இன்று சிஎஸ்கே ஜெயக்கடவா? பலிக்கடாவா? - CSK vs RR மோதல்!

ஐபிஎல் 2025: முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத்.. தொடரும் மும்பையின் சோகம்..!

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

அடுத்த கட்டுரையில்
Show comments