Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படகில் பொழுதை கழிக்க 35 லட்சம் ரூபாய்: ரொனால்டோவின் தாராளம்

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (22:28 IST)
35 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சொகுசு படகை வாடகைக்கு எடுத்து ஓய்வு எடுத்து வருகிறார் ரொனால்டோ.
 


 


ஸ்பெயின் நாட்டின் பிரபல கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் 31 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து போட்டியில் முத்திரை பதித்தவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யூரோ கோப்பை இறுதிப்போட்டியில் போர்ச்சுக்கல்-பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினார். இதில் கலந்து கொண்ட ரொனால்டோவிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் 25-வது நிமிடத்தில் களத்தை விட்டு வெளியேறினார். இருந்தாலும் வீரர்களுக்கு வெளியில் இருந்து அறிவுரை வழங்கினார். இந்த போட்டியில் போர்ச்சுக்கல் 1-0 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் போர்ச்சுக்கல் முதன்முறையாக யூரோ கோப்பையை கைப்பற்றியது.

இந்த சந்தோஷத்தில் காயத்தைப் பற்றி கவலைப்படாமல் ரொனால்டோ ஸ்பெயினில் உள்ள இபிஸாவில் தனது ஓய்வு நேரத்தை கழித்து வருகிறார். மத்திய தரைக்கடலில் உள்ள மிகவும் புகழ்வாய்ந்த இபிஸா தீவு முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு வந்திருக்கும் ரொனால்டோ 35 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சொகுசு படகை வாடகைக்கு எடுத்து தனது ஓய்வு நேரத்தை உற்சாகமாக கழித்து வருகிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments